ஹட்டனிலிருந்து சென்ற முச்சக்கர வண்டியும் டிக்கோயா பகுதியில் பயணித்த பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து.
இச்சம்பவம் நேற்று இரவு 7.30 அளவில் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வர் காயமடைந்துள்ளதோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.