கிரான்குளத்தில் மற்றுமொரு சோகம்!
காலை விபத்து இடம் பெற்ற இடத்தில் மற்றுமொரு விபத்து!
இன்று மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கார் ஒன்று விபத்துக்குள்ளளாகியிருந்தது.
அவ் விபத்து இடம்பெற்ற இடத்தில் மின்சார தூண் ஒன்று உடைந்த நிலையில் அவ்விடத்தில் சீரமைப்பு பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் மட்டக்களப்பு பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவர் துரதிஷ்ட வசமாக அவ் இடத்திலே விபத்தில் சிக்கிக்கொண்டனர் அவ் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன் மற்றுமொரு இளைஞர் காயமடைந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் அம்பாறை மத்தியமுகாம் பகுதியை சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான இளங்குடும்பஸ்தரான ரகு என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் கட்டார் நாட்டில் தொழில் புரிந்த நிலையில் அண்மையில்தான் விடுமுறையில் நாட்டிற்கு வந்திருந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுக்கின்றனர்.