தனது தாயுடன் வாழ்ந்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட46 வயதுடைய மகன் தாக்கியதில், யாசகம் பெற்று வாழ்ந்து வரும் 65 வயது மதிக்கத்தக்க தாய் மரணமடைந்துள்ளார்.
இந்த சம்பவம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி - கேணி நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(06) இடம்பெற்றுள்ளது.
மகனை சந்தேகத்தில் கைது செய்த வாழைச்சேனை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.