யாழ்–கண்டி வீதியில் இடம்பெற்ற கோர விபத்து ; மூன்று பேருந்துகள் மோதி 20 பேருக்கு நேர்ந்த துயரம்

யாழ்–கண்டி வீதியில் இடம்பெற்ற கோர விபத்து ; மூன்று பேருந்துகள் மோதி 20 பேருக்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் நாவுல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்றையும், இரண்டு தனியார் பேருந்துகளையும் உள்ளடக்கிய இந்த விபத்து, நாலந்த தபால் நிலையம் முன்பாக காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.

சிமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்றையும், இரண்டு தனியார் பேருந்துகளையும் உள்ளடக்கிய இந்த விபத்து, நாலந்த தபால் நிலையம் முன்பாக காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.

நொச்சியாகமவிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து, முன்னால் சென்ற லொறியை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்திசையிலிருந்து வந்த அநுராதபுரம் – கண்டி சொகுசு பேருந்தின் சாரதி வேகத்தை குறைத்துள்ளார்.

ஆனால், அதன் பின்னால் வந்த திருகோணமலை – கண்டி தனியார் பேருந்து, முன்னால் இருந்த பேருந்து வேகத்தை குறைத்ததை கவனிக்காமல் முந்திச் செல்ல முயன்றதில், எதிரே வந்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் நடுவில் இருந்த சொகுசுப் பேருந்தும் சேதமடைந்துள்ளது.

காயமடைந்தவர்கள் நாலந்த மற்றும் மாத்தளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பில் திருகோணமலை – கண்டி பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்திற்குப் பின்னர் தப்பியோடிய இ.போ.ச. பேருந்து சாரதி பின்னர் பொலிஸில் சரணடைந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *