சற்று முன் புதருக்குள் பாய்ந்த விமானம்-கதறி துடித்த பயணிகள்

சற்று முன் புதருக்குள் பாய்ந்த விமானம்-கதறி துடித்த பயணிகள்

கென்யாவில் தரையிறங்கும் போது புதருக்குள் புகுந்த நைரோபியின் பயணிகள் விமானம்

இன்று 24ஆம் தேதி , கென்யாவின் மண்டேரா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஒரு பயணிகள் விமானம் ஓடுபாதையை விட்டு விலகி அருகிலுள்ள புதர் பகுதிக்குள் புகுந்து தஞ்சமடைந்தது

நைரோபியைச் சேர்ந்த ‘EBB ஏர்’ விமான நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த விமானம், 32 பயணிகள் மற்றும் நான்கு விமானப் பணியாளர்கள் உட்பட 36 பேருடன் விபத்துக்குள்ளானது. இருப்பினும், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கென்ய விமான நிலைய அதிகாரிகள் (KAA) உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்து நடந்த உடனேயே களமிறக்கப்பட்ட மீட்புக் குழுக்கள், விமானத்தில் இருந்து பயணிகளை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன. விமானத்தின் வெளிப்புறப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மோசமான வானிலை அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *