குழந்தைகளுக்கான உணவில் எலி மருந்து!பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

குழந்தைகளுக்கான உணவில் எலி மருந்து!பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

பிரபல நிறுவனத்தின் குழந்தைகளுக்கான உணவு போத்தல்களில் எலி விஷம் கலந்திருப்பதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, ஒஸ்திரியா முழுவதும் உள்ள விற்பனை நிலையங்களிலிருந்து அந்தத் தயாரிப்புகள் அதிரடியாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

ஒஸ்திரியாவின் புர்ஜென்லாண்ட் பகுதியில் உள்ள வாடிக்கையாளர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ‘கேரட் மற்றும் உருளைக்கிழங்கு’ கலந்த ஒரு ஜாடியில் நச்சுத்தன்மை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குறித்த குழுமத்தின் கீழ் இயங்கும் அனைத்து அங்காடிகளிலும் உள்ள ஹிப் நிறுவனத் தயாரிப்புகளை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள நிறுவனம், தங்கள் உற்பத்தி முறையில் எவ்விதக் குறைபாடும் இல்லை என்றும், இது யாரோ திட்டமிட்டுச் செய்த “குற்றச் செயல்” என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதேபோன்ற நச்சுத் தயாரிப்புகள் செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளதால், சர்வதேச அளவில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சேதமடைந்த மூடிகள் அல்லது வழக்கத்திற்கு மாறான வாசனை கொண்ட போத்தல்களை பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், எலி விஷம் உட்கொண்டதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *