இரு குழுக்களுக்கிடையில் மோதல்! இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை

இரு குழுக்களுக்கிடையில் மோதல்! இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை

அம்பாந்தோட்டை, சூரியவெவ பிரதேசத்தில் நேற்று(30.04.2026) இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சண்டையாக மாறியுள்ளது.

இந்த மோதல் முற்றிய நிலையில், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சூரியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தாக்குதலை நடத்திய சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பியோடியுள்ளனர். கொலையுடன் தொடர்புடைய நபர்களைக் கைது செய்ய சூரியவெவ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *