மக்களே அவதானம்-மற்றுமொருவர் இலங்கையில் உயிரிழப்பு

மக்களே அவதானம்-மற்றுமொருவர் இலங்கையில் உயிரிழப்பு

மகாஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொரபொல பகுதியில் மின்னல் தாக்கியதில் நேற்று வியாழக்கிழமை (30) மாலை நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வயல் நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஒருவரே இவ்வாறு மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்.

உயிரிழந்தவர் பொரப்பொல, மகாஓயா பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மகாஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *