எரிபொருளுக்கான QR முறமை தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்

எரிபொருளுக்கான QR முறமை தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலையேற்றம் மற்றும் விநியோகத் தடைகளுக்கு மத்தியில், நாட்டில் எரிபொருளை முறைப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட கியூ.ஆர் குறியீடு முறைமை காலவரையறையின்றி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையை அடுத்து, எரிபொருள் சிக்கன நடவடிக்கையாக அரசாங்கம் மீண்டும் கியூ.ஆர் குறியீடு முறையை நடைமுறைப்படுத்தியது.

குறிப்பாக, உலக எரிபொருள் போக்குவரத்தில் 20 சதவீத பங்களிப்பை வழங்கும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலையினால், உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு விலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இது குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவிக்கையில்,

உலகளாவிய எரிபொருள் நெருக்கடி இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே, தற்போதைய கியூ.ஆர் குறியீடு முறையின் கீழேயே சில்லறை எரிபொருள் விநியோகம் தொடரும். எவ்வாறாயினும், தேவைக்கேற்ப இந்த முறையில் மாற்றங்கள் செய்யப்படும் என்றார்.

எதிர்காலத்தில் கொடுப்பனவு முறைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குதல், வாகனங்களின் வகைகளுக்கு ஏற்ப வழங்கப்படும் எரிபொருள் அளவை அவ்வப்போது திருத்தம் செய்தல், சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கு எரிபொருள் மானியங்களை வழங்குவது குறித்து பரிசீலித்தல் போன்ற திட்டங்கள் அமுல்ப்படுத்தப்படும்.

உலகளாவிய விநியோகத் தடைகள் இருந்தபோதிலும், உள்நாட்டு சந்தையில் தட்டுப்பாடின்றி எரிபொருளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், சாத்தியமான நெருக்கடிகளை எதிர்கொள்ள இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிடம் இருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ளவும் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *