பலத்த மின்னல் தாக்கம் குறித்தும் எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழையுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, குறித்த பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு அதிகமாகக் காணப்படுவதுடன், பலத்த மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், மன்னார் முதல் புத்தளம், கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இதனால் குறித்த கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பான நிலையை அடையக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (08) பிற்பகல் 1 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த வானிலை அறிவிப்பு, நாளை அதிகாலை 1 மணி வரை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment