நாட்டு மக்களுக்கு பேரிடி-அதிகரித்த விலை

 

நாட்டில் உள்ள சில சீமெந்து நிறுவனங்கள் 50 கிலோகிராம் எடையுடைய சீமெந்து மூடை ஒன்றின் விலையை 100 ரூபாவினால் உயர்த்தியுள்ளன.

இதற்கமைய, இதுவரை 50 கிலோகிராம் எடையுள்ள சீமெந்து மூடை ஒன்றின் விலை 2,100 ரூபாய் முதல் 2,250 ரூபாய் வரையில் காணப்பட்ட நிலையில், தற்போது 2,200 ரூபாய் முதல் 2,350 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

 

சீமெந்து உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளமையினாலேயே இவ்வாறு சீமெந்து விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment