நாட்டின் இரு வெவ்வேறு பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நீரில் மூழ்கிய சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி 63 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று நண்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த பெண் வவுனியா பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர் தனியாக வசித்து வந்ததுடன், மனநலப் பாதிப்புக்கு உள்ளானவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குளத்திற்கு அருகில் சென்றபோது தவறுதலாக நீரில் விழுந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இதேவேளை, கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகேவிட்ட பகுதியில் அமைந்துள்ள கல்ல சொரொவ்வு அணைக்கட்டுக்கு அருகில் நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் கணேமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு சம்பவங்கள் தொடர்பிலும் நெளுக்குளம் மற்றும் கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
.jpg)