நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாடு!விமல் வீரவன்ச இன்று நீதிமன்றத்தில் முன்னிலை!

 முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாடு தொடர்பில் இன்று (12) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

குறித்த முறைப்பாடு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த முறைப்பாட்டில் விமல் வீரவன்ச பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், இன்றைய விசாரணையின்போது அவருக்காக அவரது சட்டத்தரணிகள் சமர்ப்பணங்களை முன்வைக்கவுள்ளனர்.

Post a Comment