அநுரவின் அதிரடி தீர்மானம்

 

அரச சேவைக்காக புதிய வாகனங்களை கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற தேசிய தொழிற்சங்க மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்நதும் தெரவிக்கையில்,

2025ஆம் ஆண்டில் மட்டும் அரச வாகனங்களைப் பழுதுப் பார்ப்பதற்காக சுமார் 25 பில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளது.

இத்தகைய அதிகப்படியான செலவுகளைக் குறைக்கும் நோக்கில், தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய வாகனங்களை படிப்படியாக நீக்கிவிட்டு, அரச சேவைக்காக புதிய வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பழைய வாகனங்களுக்குப் பதிலாக புதிய வாகனங்களை அறிமுகப்படுத்துவது மாத்திரமின்றி, பொதுச் சேவையில் உள்ள காலாவதியான கணினி அமைப்புக்களை நீக்கிவிட்டு, நவீன அமைப்புக்களை நிறுவுவதற்கு தீர்மானித்துள்ளோம்.

வரி செலுத்துவோர் அழையாள எண்ணைப்(TIN) பெறுவதற்காக மக்கள் நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லாத வகையில் டிஜிட்டல் கட்டமைப்பு வலுப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார். 

Post a Comment