இலங்கையை உலுக்கிய மற்றுமொரு சோகம்-தம்பதியினர் பலி-மழைக்காலம் மக்களே அவதானம்

  

குருணாகல் வாரியபொல பிரதேசத்தில் வீதி விளக்கை அணைக்க முயன்ற வயதான தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குருணாகல் வாரியபொல, அவுல்லேகம பகுதியில்   மின்சாரம் தாக்கி வயோதிபத் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.

மின்கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த வீதிவிளக்கை அணைக்க முயன்ற 61 வயதுடைய கணவர் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டுள்ளார்.

அவரைக் காப்பாற்ற முயன்ற 60 வயதுடைய மனைவியும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Post a Comment