மின்சாரக் கட்டமைப்பை வலுப்படுத்த 2650 கோடி ரூபாய் ஒதுக்கீடு! சூரிய மின்சக்திக்கு மானியம் – ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மின்சாரக் கட்டமைப்பை மேம்படுத்த 26.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட உரையில் அவர் இதனை அறிவித்துள்ளார்.

இதன்படி, புதிய கூரை சூரிய மின்சக்தி அமைப்புகளுடன் மின்கலங்களைப் பொருத்துவோருக்கு அதிகபட்சமாக 250,000 ரூபாய் மானியம் வழங்கப்படவுள்ளது.

மேலும், 300,000 மின்சார நுகர்வோருக்கு இலவச ஸ்மார்ட் மின்மானிகள் வழங்கப்படுவதுடன், கிளிநொச்சி – ஹபரணை இடையே புதிய மின்சாரக் கடத்தல் பாதையும் அமைக்கப்படவுள்ளது.

அதேவேளை, கொழும்புத் துறைமுகம் – கொலன்னாவை இடையே எரிபொருள் குழாய் அமைக்க 16.3 பில்லியன் ரூபாயும், முத்துராஜவெல – கட்டுநாயக்க விமான நிலையம் இடையே விமான எரிபொருள் குழாய் மற்றும் சேமிப்பு வசதிகளை உருவாக்க 22.34 பில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் எரிபொருள் சேமிப்புத் திறனை 45 நாட்களுக்குத் தேவையான அளவுக்கு அதிகரிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

Post a Comment