NPP – JVP இடையே பிளவு இல்லை! – பிரதியமைச்சர் பிரதீப்

  

தற்போதைய அரசாங்கம் வலுவாகச் செயற்பட்டு வருவதாகவும், தேசிய மக்கள் சக்தி (NPP) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (JVP) இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் தவறானவை என்றும் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

அரசாங்கம் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் தமது ஆர்ப்பாட்டங்களையும் அரசியல் நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்குத் தடைகள் விதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

NPP மற்றும் JVP இடையே எந்தவிதமான பிளவுகளும் முரண்பாடுகளும் இல்லை எனத் தெரிவித்த அவர், இரு தரப்பினரும் ஒற்றுமையுடன் செயற்படுவதாகக் கூறினார்.

மேலும், அரசாங்கத்துக்கு சர்வதேச நாடுகள், அமைப்புகள் மற்றும் தலைவர்களின் ஆதரவும் நம்பிக்கையும் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்துக்கு ஆதரவாகப் பெருமளவிலான மக்கள் ஒன்றிணைவதை எதிர்க்கட்சிகளால் தடுக்க முடியாது என்றும் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

Post a Comment