மாத்தறை, நாவிமன பகுதியில் அமைந்துள்ள சார்க் கலாசார நிலைய வளாகத்தில் இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கல்வி நடவடிக்கைகள் மற்றும் தொழிற்பயிற்சிப் பணிகளுக்காக குறித்த வளாகத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு 2026 ஜூன் 1ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், தற்போது வாடகைக் கட்டிடங்களில் இயங்கிவரும் இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தை சார்க் கலாசார நிலைய வளாகத்திற்கு மாற்றுவது பொருத்தமானதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுமார் 11 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த வளாகத்தில், 200,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட கட்டிடத் தொகுதி ஒன்று பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
குறித்த வளாகத்தைப் பல்கலைக்கழகத்திற்காகப் பயன்படுத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் இணக்கப்பாடும் கிடைத்துள்ளது.
இதற்கமைய, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
