நிப்பொன் மாவத்த வீதியின் எஞ்சிய பகுதியும் கோட்டை மாநகர சபையிடம் ஒப்படைக்க அனுமதி

எத்துல்கோட்டையில் அமைந்துள்ள நிப்பொன் மாவத்த வீதியின் எஞ்சிய பகுதியை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபையிடம் ஒப்படைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தையிலிருந்து பத்தகான உயிர்ப் பல்வகைமைப் பூங்கா ஊடாக பத்தகான வீதியை இணைக்கும் வகையில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த வீதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியை மாநகர சபையிடம் ஒப்படைப்பதற்கு 2008ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், எஞ்சிய பகுதியையும் முறையாகப் பராமரிக்க வேண்டுமெனப் பிரதேச மக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, அதனை மாநகர சபையிடம் ஒப்படைக்க 2025 மார்ச் 12ஆம் திகதி நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கான நகர அபிவிருத்தி அதிகார சபையின் முகாமைத்துவக் குழு அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

இதற்கமைய, 2 ஏக்கர், 2 றூட் மற்றும் 31 பேர்ச்சஸ் பரப்பளவைக் கொண்ட வீதிப் பகுதியை அளிப்புப் பத்திரத்தின் மூலம் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபையிடம் ஒப்படைப்பதற்குப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Post a Comment