வைரஸ் காய்ச்சல் பரவல்! ருஹுண பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் மாற்றம்

பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக, ருஹுண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இறுதி ஆண்டு மாணவர்களைத் தவிர ஏனைய அனைத்து மாணவர்களினதும் கல்வி நடவடிக்கைகளை இணையவழியில் (Online) முன்னெடுப்பதற்கு நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

கடந்த இரு வார காலப்பகுதியில், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களில் சுமார் 30 பேர் வரை இந்த வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

வைரஸ் காய்ச்சல் மேலும் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இச்செயல்முறை வரும் வெள்ளிக்கிழமை வரை நடைமுறையில் இருக்கும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Post a Comment