நோட்டன் – கார்பெக்ஸ் வீதியில் நேற்று (28) மாலை இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிள் ஒன்று இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
மாலை 5.40 மணியளவில் ஒஸ்போன் பகுதியிலிருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிளே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் மோட்டார் சைக்கிளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்ட போதிலும், அதனைச் செலுத்தியவர் எவ்விதக் காயமுமின்றி உயிர் தப்பியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நோட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
.jpg)