இயற்கை அழகு, வரலாற்றுச் சிறப்பு, தனித்துவமான குதிரைகள், வெள்ளை மணற்கரைகள் எனப் பல சிறப்புகளைக் கொண்ட இலங்கையின் வடக்கேயுள்ள நெடுந்தீவு, ஏன் இன்னும் வளர்ச்சிக்காகக் காத்திருக்கிறது?
யாழ்ப்பாணத்திலிருந்து நெடுந்தீவைச் சென்றடைவது ஏன் இன்றும் பலருக்குச் சவாலாக உள்ளது? படகுப் போக்குவரத்தில் ஏற்படும் தடங்கல்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் எவ்வாறு பாதிக்கின்றன? இந்தப் பிரச்சினைக்கான தீர்வு என்ன?
மக்களின் அனுபவங்கள், தீவின் தனித்துவம் மற்றும் போக்குவரத்துப் பிரச்சினையின் தாக்கம் ஆகியவற்றை ஆராயும் இந்தக் காட்சிசார் செய்தித் தொகுப்பு, நெடுந்தீவின் எதிர்காலம் குறித்த முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.
