முல்லைத்தீவில் 20 வயது இளைஞனுக்கு நேர்ந்த சோகம்

 

முல்லைத்தீவு- மூங்கிலாறு பகுதியில் உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது இன்றையதினம்(16.10.2026) இடம்பெற்றுள்ளது.

மயில்வாகனபுரம்,பிரமந்தனாறு கிளிநொச்சியினை சேர்ந்த 20 அகவையுடைய நபரே இவ்வாறு படுகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றார்.

மூங்கிலாறு பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் அலங்கார தேருக்கான கொட்டகை அமைப்பதற்காக தேரின் அளவீட்டு பணியினை மேற்கொண்ட போது தேர் தரித்து நின்ற பகுதிக்கு மேல் உயர் அழுத்த மின்சார கம்பிகள் காணப்பட்டதால் கையில் இரும்பு கம்பியினை வைத்து குறித்த இளைஞர் அளவீடு செய்தார்.

இதன்போது அது உயர் அழுத்த மின்சார கம்பியில் தொடுகை பட்டு மின்சார தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

மின்சார தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் மூங்கிலாறு பிரதேச வைத்திய சாலை கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment