ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு: பொருத்தமான நேரத்தில் ஜனாதிபதி முடிவெடுப்பார் – பிரதமர்


கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில், பொருத்தமான நேரத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தகுந்த முடிவை எடுப்பார் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் நீதிமன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடையது எனக் குறிப்பிட்ட பிரதமர், மேலதிக நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் ஆலோசனையின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும் கூறினார்.

ஜனாதிபதி நீதித்துறை, நாட்டின் கலாச்சாரம் மற்றும் அரசியலமைப்பை மதிப்பவர் எனத் தெரிவித்த அவர், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு சரியான தீர்மானத்தை ஜனாதிபதி எடுப்பார் என நம்பிக்கை வெளியிட்டார்.

கண்டியிலிருந்து பௌத்த பிக்குகள் முன்னெடுத்த எதிர்ப்புப் பேரணி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

நேற்று (15) கண்டிக்குச் சென்ற பிரதமர், மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகா விகாரைகளில் மகாநாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்களைச் சந்தித்ததுடன், அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் திருத்தப்பட்ட தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு ஆவணத்தையும் அவர்களிடம் கையளித்தார்.

Post a Comment