ஹோமாகம பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞரின் இறுதிக்கிரியைகள் இன்று!

போதைப்பொருள் குற்றச்சாட்டில் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இஷார ஹர்ஷ குமாரவின் இறுதிக்கிரியைகள் இன்று (29) இடம்பெறவுள்ளன.

இறுதிக்கிரியைகளை நடத்துவது தொடர்பாக, கஹதுடுவ பொலிஸார் நேற்று (28) கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விடயங்களைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரிவத்துடுவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் கடந்த 25ஆம் திகதி உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், அவர் பொலிஸ் காவலில் இருந்தபோது தாக்கப்பட்டதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Post a Comment