அஸ்வெசும (Aswesuma) பெயர் இல்லையா? உடனே மேன்முறையீடு செய்யுங்கள்{இதோ விபரம்}

 

அஸ்வெசும (Aswesuma) நலன்புரித் திட்டத்தின் முதற்கட்ட பயனாளிகளின் பெயர் விபரங்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இப்பட்டியலின் அடிப்படையில் 'மிகவும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்கள்' (Extremely Poor) மற்றும் 'வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்கள்' (Poor) ஆகிய இரு பிரிவுகளுக்கு மட்டுமே முதன்மையாகக் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.wbb.gov.lk ஊடாகவோ அல்லது உங்கள் பிரதேச செயலக அறிவிப்புப் பலகைகள் மூலமாகவோ பொதுமக்கள் சரிபார்த்துக் கொள்ள முடியும்.

ஒன்லைனில் சரிபார்க்கும் வழிமுறைகள்:

அதிகாரப்பூர்வ Welfare Benefits Board (www.wbb.gov.lk) இணையத்தளத்திற்குச் சென்று, உங்கள் மாவட்டம், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் கிராம நிலதாரி பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை (NIC) உள்ளீடு செய்து நிலையை அறிந்துகொள்ளலாம்.

திரையில் தோன்றும் விபரங்களின் விளக்கம்:

1. Selected (Eligible): உங்கள் பெயர் தகுதியானவர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, உங்களுக்கான கொடுப்பனவுப் பிரிவு (Extremely Poor / Poor) குறிப்பிடப்பட்டிருக்கும்.
2. Non-Eligible: தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தால் அல்லது தகுதியற்றவராகக் கருதப்பட்டால் இவ்வாறு தோன்றும்.
3. Rejected: கோரிக்கை முழுமையாக நிராகரிக்கப்பட்டதைக் குறிக்கும்.

மேன்முறையீடு செய்வது எவ்வாறு?

பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது பொருத்தமற்ற பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கருதினாலோ, பொதுமக்கள் உடனடியாக ஆன்லைன் மூலமாகவோ அல்லது பிரதேச செயலகத்தில் நேரடியாக விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் பூர்த்தி செய்தோ மேன்முறையீடு செய்ய முடியும். அதேபோல, தகுதியற்ற நபர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தால் அவர்கள் மீதான ஆட்சேபனைகளையும் பதிவு செய்ய முடியும். இதற்கான கால அவகாசம் குறுகிய காலமே என்பதால், பயனாளிகள் தாமதிக்காமல் விரைந்து செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment