வெலிசர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நதுன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் ஹரக் கட்டா உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளின் பிணை கோரிக்கைகளை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) நிராகரித்துள்ளது.
மேலும், இரண்டு பிரதிவாதிகளை விடுதலை செய்யுமாறு அவர்களது சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கைகளையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
நீதிமன்றம் முன்னர் வழங்கிய உத்தரவுக்கு எதிராக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதால், தற்போதைய நிலையில் பிணை கோரிக்கைகளைப் பரிசீலிக்க முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.
