கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை வைத்தியசாலையின் மருத்துவப் பரிந்துரைக்கு அமைய அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
