இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மனுஷ! வாக்குமூலம் வழங்க முன்னிலை

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் மனுஷ நாணயக்காரவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment