இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (12) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
காலை வேளையில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், அவற்றினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
