சவூதி அரேபியா மீது ஹூதிகள் மீண்டும் தாக்குதல்! ஏவுகணைகளை இடைமறித்ததாகக் கூட்டணி அறிவிப்பு

சவூதி அரேபியா மற்றும் ஹூதிப் படைகளுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ரியாத் விமான நிலையம் மற்றும் நாட்டின் கிழக்கு, மேற்கு பகுதிகளில் உள்ள மசகு எண்ணெய் விநியோக நிலையங்கள் மீது ஹூதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளனர்.

எனினும், ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக சவூதி தலைமையிலான கூட்டணி அறிவித்துள்ளது.

இதற்குப் பதிலடியாக, பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் சேமிக்கப் பயன்படுத்தப்பட்ட ஐந்து சுரங்கப் பாதைகள், நான்கு ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் ஓர் ஏவுகணைக் களஞ்சியம் அழிக்கப்பட்டதாகவும் கூட்டணி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இம்மாதம் ரியாத்திலுள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 13 பேர் உயிரிழந்ததுடன், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மோதலால் ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு, எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன.

மேலும், சவூதி அரேபியாவைப் பாதுகாப்பதற்காகத் தனது இராணுவம் உதவுவதற்கு எகிப்து நாடாளுமன்றம் திங்கட்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

Post a Comment