சம்மாந்துறையில் நோய்வாய்ப்பட்டு வீழ்ந்த காட்டு யானைக்கு தீவிர சிகிச்சை!


அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை சேகப்பற்று பகுதியில் நோய்வாய்ப்பட்டு வயல்வெளியில் வீழ்ந்த சுமார் 15 வயதுடைய காட்டு யானைக்கு வனவிலங்கு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து அவசர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கடந்த 21ஆம் திகதி சேற்றுப் பகுதியில் எழுந்திருக்க முடியாத நிலையில் காணப்பட்ட யானைக்கு, 22ஆம் திகதி முதல் தொடர்ச்சியான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

வளத்தாப்பிட்டி களப் பாதுகாப்புப் படைப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஜி. அஜித் குணரத்னவின் வேண்டுகோளுக்கு இணங்க மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிரின் ஒத்துழைப்புடன், சிகிச்சைக்கான கூடாரங்கள் மற்றும் யானையை மீட்பதற்கான கனரக வாகன வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. யானையின் உயிரைக் காப்பாற்ற மருத்துவக் குழுவினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

Post a Comment