தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில், சட்டவிரோதப் படகு மூலம் தமிழகத்துக்குள் பிரவேசித்த இலங்கையர்கள் மூவரை ராமேஸ்வரம் கியூ பிரிவு பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையைச் சேர்ந்தவர்களைச் சட்டவிரோதமாகத் தமிழகத்துக்குப் படகு மூலம் அழைத்து வருவதற்கு 1.10 இலட்சம் ரூபாய் பணம் பெறப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
