இலங்கையின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதன்படி, மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கும், குருநாகல், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (19) காலை 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட எச்சரிக்கை, நாளை (20) அதிகாலை 1.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
