இலங்கை முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விநியோகம் இன்று (19) மாலை முதல் வழமைக்குத் திரும்பும் என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
3,900 மெட்ரிக் தொன் திரவப் பெற்றோலிய எரிவாயுவை ஏற்றிவந்த ‘FRANCOIS’ கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கப்பலில் உள்ள எரிவாயுவை இறக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக எரிவாயு நாட்டை வந்தடைவதால், சந்தையில் தடையற்ற விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஒக்டோபர் 16ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நாட்டின் சந்தைக்கு 3 இலட்சத்து 50 ஆயிரம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
