கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுவிக்கக் கோரி, கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்படும் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, வீதிகளை மறித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல், பிரதமர் அலுவலகம் முன்பாகவும் பூங்காவின் புத்தர் சிலை அமைந்துள்ள பகுதியிலும் தொடர்ந்து தங்கியிருத்தல், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் ஆகியவற்றைத் தவிர்க்குமாறு போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அதனை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
