இலங்கையில் 78 மரணங்கள் பதிவு அச்சத்தில் மக்கள்

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளின்படி, இதுவரை நாட்டில் 100,871 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மரண விகிதம் 0.077 சதவீதமாக காணப்படுகிறது.

பதிவான நோயாளர்களில் 52.45 சதவீதம் பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 21,377 பேரும், கொழும்பில் 19,759 பேரும், கண்டியில் 7,689 பேரும், களுத்துறையில் 6,400 பேரும், மாத்தறையில் 6,305 பேரும் பதிவாகியுள்ளனர்.

மாதாந்த ரீதியில், ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 29,964 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஜூன் மாதத்தில் 21,533 பேரும், ஆகஸ்ட் மாதத்தில் 10,155 பேரும், செப்டம்பர் மாதத்தில் 5,230 பேரும் பதிவாகியுள்ளனர்.

தற்போது நாட்டில் 37 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி ஆபத்தான வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்து, சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment