போதைப்பொருள் இல்லாத இளைய தலைமுறைக்காக புதிய 4 அடுக்கு சமூகக் கட்டமைப்பு

 போதைப்பொருள் அற்ற இளைய தலைமுறையை உருவாக்குவதற்கு உதவும் வகையில், நான்கு அடுக்குகளைக் கொண்ட சமூகக் கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, போதைப்பொருள் தடுப்புக்கான தேசிய சபை, மாவட்ட சபைகள், பிராந்திய செயல்பாட்டுக் குழுக்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்கள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு இந்தக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மாவத்தகமவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை சமூக மட்டத்தில் மேலும் வலுப்படுத்துவதற்கும், இளைஞர்களை போதைப்பொருளிலிருந்து பாதுகாப்பதற்கும் இந்தக் கட்டமைப்பு உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment