ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பாக தற்போதைய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரான குமார ஜெயகொடிக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணைகளுக்காக நவம்பர் மாதம் 03 ஆம் திகதி அழைப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (05) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷந்த கொடவெல முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சாட்சியப் பதிவுகள் இடம்பெற்றதுடன், மேலதிக சாட்சிய விசாரணையை நவம்பர் மாதம் 03 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக நமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
