கட்டுநாயக்கவிலிருந்து சவூதி அரேபியாவின் தம்மாம் மற்றும் ரியாத் ஆகிய விமான நிலையங்களுக்கு இடையிலான ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானச் சேவைகள் அனைத்தும் வரும் ஒக்டோபர் 24ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
சவூதி அரேபியாவில் நிலவும் போர்ப் பதற்றச் சூழலைக் கருத்திற் கொண்டு, இத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் தொடர்பாடல் பிரிவு, ஒக்டோபர் 16ஆம் திகதி பிற்பகல் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் எப்பொழுதும் தனது பயணிகள் மற்றும் விமானப் பணிக்குழாமினரின் பாதுகாப்பிற்கே முதன்மை முன்னுரிமை அளிக்கிறது. எனவே, தற்போதைய சூழ்நிலை வணிக ரீதியிலான விமானப் போக்குவரத்திற்குப் பாதுகாப்பானது என உறுதிசெய்யப்பட்ட உடனேயே, மீண்டும் விமானச் சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ் இடைநிறுத்தம் காரணமாகத் தமது விமானப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்குத் தமது பயண முகவர்களைத் (Travel Agents) தொடர்புகொள்ளுமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேலும், பின்வரும் வழிகளினூடாகவும் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்:
இலங்கைக்குள்: 1979
சர்வதேச அழைப்புகளுக்கு: +94117771979
வாட்ஸ்அப் (WhatsApp குறுஞ்செய்தி): +94744441979
இணையதளம்: <-block _nghost-ng-c3541953271="">www.srilankan.com
