ஞானசார தேரரின் காவி உடை விவகாரம்: ஒக்டோபர் 22ஆம் திகதி விசாரணை!


சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி உடையைக் களைய சிறை அதிகாரிகள் எடுத்த தீர்மானத்தைச் செல்லுபடியற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, எதிர்வரும் ஒக்டோபர் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனுக்கள் இன்று (15) அமல் ரணராஜா, மஹேன் கோப்பல்லவ மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய நீதிபதிகள் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

மனுதாரர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைக் கவனத்தில் கொண்ட நீதிபதிகள் அமர்வு, மனுக்களை ஒக்டோபர் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டது.

திணியாவல பாலித்த தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் குழுவினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Post a Comment