நேபாளத்தில் உள்ள புதி காண்டகி (Budhi Gandaki) நதிப் படுகையில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்தபட்சம் 10 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் இந்த வெள்ளத்தில் இரண்டு பாலங்கள் மற்றும் நான்கு தொங்கு பாலங்கள் உட்பட ஆறு பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
அருகாட் (Arughat), திரிபுரசுந்தரி (Tripurasundari) மற்றும் சோதி-மான்பு (Soti-Manbu) ஆகிய இடங்களில் உள்ள வாகனப் பாலங்களை வெள்ளம் அழித்துவிட்டதாகத் தெரிவித்தார்.
கோர்கா மாவட்டத்தில் உள்ள தார்சே ஊரக நகராட்சியின் (Dharche Rural Municipality) 1 மற்றும் 3 வது வார்டுகளை இணைக்கும் பெய்லி பாலம் ஒன்றும் வெள்ளநீரால் அடித்துச் செல்லப்பட்டது.
இந்தப் பேரிடரில் சேதமடைந்த அல்லது அழிக்கப்பட்ட பிற பாலங்களில், மச்சிகிவாலாவுடன் (Machhikhola) கராவுஜாவையும் (Karauja), தடோபார்யாங்குடன் (Thadobharyang) ஜகத்தையும் (Jagat), காட்கேகொலாவுடன் (Ghattekhola) பிலுமையையும் (Philim) இணைக்கும் நடைபாலங்களும் அடங்கும்.
