ரூ.1,000 கோடி மோசடி விவகாரம்: பெண் பொலிஸ் அதிகாரியின் வாகனம் CID வசம்!


 மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி மோசடி தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, பெண் பொலிஸ் அதிகாரி ஒருவருக்குச் சொந்தமான மோட்டார் வாகனத்தை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

கொட்டவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவுப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்தவுக்குச் சொந்தமான வாகனமே இவ்வாறு பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தின் பெருந்தொகைப் பணத்தை மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் நபர் ஒருவர், குறித்த வாகனத்திற்கான குத்தகைத் தவணைப் பணத்தைச் செலுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், வாகனத்தைக் கொள்வனவு செய்வதற்கான பணம் எவ்வாறு ஈட்டப்பட்டது என்பது தொடர்பில் தகவல்களை வழங்க வருணி போகஹவத்த தவறியுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Post a Comment