தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் விவகாரத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரட்டை நிலையை, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா காணொளி வாயிலாகக் கடுமையாகக் கேலி செய்து அம்பலப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்குத் தமிழ் மொழி தெரியாததை வாய்ப்பாகப் பயன்படுத்தி, NPP உறுப்பினர்கள் வடக்கு மற்றும் தெற்கில் முரண்பாடான கருத்துக்களைப் பேசி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளஞ்செழியன் திலீபனின் அஞ்சலி நிகழ்வை உணர்வுபூர்வமானது என்றும், அரசு எந்தத் தடையும் விதிக்கவில்லை என்றும் தமிழில் பேசுவதைச் சுட்டிக்காட்டி, தெற்கில் கைது எச்சரிக்கை விடுப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.
அத்துடன் பொய் சொல்லும்போது கூட அனைவரும் ஒன்றாகப் பேசி ஒரே கதையைச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்" என ஆளுங்கட்சியின் குளறுபடிகளை அர்ச்சுனா தனது பாணியில் கடுமையாகச் சாடியுள்ளார்.
