சற்று முன் அதிர்ந்தது பூமி

 

ஆப்கானிஸ்தானில் இன்று (1) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கமானது 6:59 அளவில் பதிவாகியுள்ளதுடன், 5.3 மெக்னிடியூட்டாகப் பதிவாகியுள்ளது. 

மேலும், இது பூமிக்கு அடியில் 126 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 

தலைநகர் காபூலில் இருந்து வடமேற்கு திசையில் சுமார் 165 கிலோமீற்றர் தொலைவில், இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிர்ச்சேதங்கள் குறித்த மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Post a Comment