ஞானசார தேரருக்கு திறந்த பிடியாணை – வெளிநாடு செல்லவும் தடை!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.

மேலும், ஞானசார தேரர் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும், திறந்த பிடியாணையை பொலிஸ் மா அதிபர் ஊடாக நடைமுறைப்படுத்துமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Post a Comment