நம்பிக்கையை இழந்துவிட்டாரா பிரதமர்?
பகிடிவதையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில், விசாரணைகள் இடம்பெறுகின்றமை உறுதி செய்யப்பட வேண்டுமென, உயர்கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்கள் இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் இயங்கும் உயர் கல்வித் துறைக்கான உபகுழுக் கூட்டத்தில் இது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை கட்டுப்படுத்துவதில் பல்கலைக்கழகங்களுக்கு நெறிமுறை ரீதியான பொறுப்பு இருப்பதாகவும் பிரதமர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
