மீண்டும் குறைந்தது தங்கத்தின் விலை

 

கடந்த வெள்ளிக்கிழமை 24 கரட் தங்கம் ஒரு பவுண் 369,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (28) அதன் விலை 2,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 367,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 337,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Post a Comment