மீண்டும் யோஷித்தவை விரட்டும் நீதிமன்றம்
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித்த ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகளான வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித்த ராஜபக்ச ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
வழக்கின்போது சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் பரிசீலித்த நீதிமன்றம், குறித்த வழக்கு நடவடிக்கைகளை விசாரணை ஒன்றிற்கு அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
முறையான தகுதிகளைப் பூர்த்தி செய்யாத நிலையிலும், பிரதிவாதியான யோஷித்த ராஜபக்சவை பிரிட்டனின் அரச கடற்படைப் பயிற்சிப் கல்லூரிக்குப் பயிற்சிக்கு அனுப்பியதன் ஊடாக ஊழல் குற்றச்சாட்டைப் புரிந்ததாகக் குறிப்பிட்டு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
