நான்கு பெண்கள் திட்டமிட்டு செய்தகாரியம்
பேருந்தில் பயணித்த பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை திட்டமிட்டு திருடிய நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பலாங்கொடையில் இருந்து இம்புலாமுர நோக்கி பயணித்த பேருந்தில் பயணித்த பெண் ஒருவரின் ஐந்து இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியை திருடியதாக கூறப்படும் நான்கு பெண்களை பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திருகோணமலை உப்புவெளி பகுதியில் இருந்து வந்த சந்தேக நபர்கள் தங்கச் சங்கிலி ஒன்றை அணிந்திருந்த பெண்ணின் அருகில் சென்று குழப்பம் ஒன்றை ஏற்படுத்தி அவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை திருடி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் தனது தங்க சங்கிலி காணாமல் போனதை அடுத்த பேருந்தில் கூச்சல் இட்டதை அடுத்து குறித்த நான்கு பெண்களும் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
பேருந்தில் பயணித்த பயணிகள் நான்கு பெண்களையும் பிடித்துள்ளதோடு பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
திருகோணமலை உப்புவெளி பகுதியைச் சேர்ந்த 29,31,56,57, வயதுடைய நான்கு பெண்களே பலாங்கொடை பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
